நாட்டின் மேலும் 1,898 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்து இன்றைய தினம் சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து இதுவரையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 207,287 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் புதிதாக 1,731 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அதன்படி, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 241, 420 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.