இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவை ஐ.சி.சி. “ஹால் ஆஃப் ஃபேம்” பட்டியலில் சுனில் கவாஸ்கர் அதிகாரிப் பூர்வமாக இணைத்துக் கொண்டார்.
இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 3 ஆவது நாளில் குமார் சங்கக்கார ஐ.சி.சி ஹால் ஆஃப் ஃபேமில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொள்ளப்பட்டார்.
இதன்போது இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் இதன்போது அவருக்கு சிறப்பு தொப்பி சின்னம் பொறித்த விருதினை வழங்கி ஐ.சி.சி ஹால் ஆஃப் ஃபேமில் வரவேற்றார்.
குமார் சங்கக்கார இரு வகையான கிரிக்கெட்டுகளில் இலங்கை அணி சார்பில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர் ஆவார்.
கவாஸ்கர் ராகுல் டிராவிட்டை ஐ.சி.சி ஹால் ஆஃப் ஃபேமில் 2018 ஆம் ஆண்டு இணைத்துக் கொண்டார்.
கவாஸ்கர் மற்றும் சங்கக்காரா இருவரும் தற்போது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வர்ணனையாளராக செயற்படுகின்றனர்.