பள்ளிகள் மற்றும் முன்பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட மருத்துவ நிபுணர்களின் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
இந்த அறிக்கை உரிய நேரத்தில் ஜனாதிபதியிடம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு சுமார் நான்கு வாரங்களுக்கு முன்னதாக மாணவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியையாவது வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக மூன்று சுற்று விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், தேவையான ஆலோசனைகளை வழங்க ஒரு மருத்துவ குழு முன்வந்து செயல்படுவதாகவும் அவர் கூறினார்.
அந்த வகையில் குறித்த மருத்துவ நிபுணர்கள் குழு தயாரித்த அறிக்கை கல்வி அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அதை கல்வி அமைச்சரிடம் வழங்கிய பின்னர், ஜனாதிபதியை சந்தித்து இது குறித்து மேலும் விவாதிக்கலாம் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.