ஈழத் தமிழ் மக்களின் விடயத்தில் இந்தியா உடனடியாக தலையிட வேண்டிய தருணம் இதுவாகும். 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி ஈழத்தில் விடியலை ஏற்படுத்த வேண்டும். ”
அண்மையில் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கொழும்பு சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதன்போது, ஈழத் தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்ய இந்திய நிச்சயமாக உதவும் என்று உயர்ஸ்தானிகர் கூறியுள்ளமை நினைவுகொள்ள வேண்டியது.
இனியும் காலத்தை தாழ்த்தாமல், உடனடியாக இந்தியா தலையிட்டு வடக்கு கிழக்கு மக்களை காப்பாற்ற வேண்டும். உடனடியாக 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் நாம் ஒன்றுபட்ட குரலில் வலியுறுத்த வேண்டும்.
இந்த சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியலாக அணுகாமல் தீர்வுக்கான வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும். அப்படி நடந்து கொண்டால்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்கும். அல்லது கூட்டமைப்பு காப்பாற்றப்படும் என்பதையும் நினைவில் கொள்க.
இதனை தவிர்ப்பதனால் இந்தியா பேராபத்தை சந்திக்க சேரிடும். இந்த அபாயச் சூழலை இந்தியா உணரத் தவறினால் அதன் இருப்புக்கும் பாதுகாப்புக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புண்டு. எனவே இதனை கூட்டமைப்பு எடுத்துரைத்து உணர்த்த வேண்டும்.
இந்த விடயத்தில் இலங்கை தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு ஒரே குரலுடன் வலுவான ஆதரவை வழங்க வேண்டும் என்பது ஈழத் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். அதுவே தமிழ் தலைமைகளின் கடமையுமாகும்.
அதேபோன்று இந்த விடயத்தில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட தமிழகக் கட்சிகளும் முழு ஆதரவை நல்கி, காணி, பொலிஸ் அதிகாரம் அடங்கிய 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி, அனைவரும் ஈழத் தமிழ் மக்களின் வாழ்க்கையில் அமைதியை ஏற்படுத்த வேண்டும்.
கிருபா கிசான்
18.06.2021