முல்லைத்தீவு – தண்ணிமுறிப்புப் பகுதியில், தற்போது பௌத்தமயமாக்கல் முற்றுகைக்குள் உள்ள தமிழர்களின் பூர்வீக குருந்தூர்மலையினை விரைவில் மீட்போம் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு குருந்தூர் மலையை மீட்பதற்காக தமிழ்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுடன் இணைந்து வழக்குத் தொடர்வதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்றுவருவதாகவும், அவ்வாறு வழக்குத் தொடர்வதற்கான ஆயத்தக்கட்டப்பணிகளில் பெரும்பாலான பணிகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், எனவே குருந்தூர்மலையினை மீட்க வழக்கு விரை தொடரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக தமிழர்களின் பூர்வீக குருந்தூர்மலையில் தொல்லியல் ஆய்வு என்ற போர்வையில் அங்கு பௌத்த மயமாக்கல் செயற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றது. இம்மாதம் 16 ஆம் திகதியும் அங்கு கட்டடம் ஒன்று நிறுவுவதற்கான அடிக்கல் ஒன்றும் நாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மீண்டு குருந்தூர் மலையில் கட்டடம் ஒன்று அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இவ்வாறாக தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான குருந்தூர்மலையினை பௌத்த மயப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனவே நாம் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், ஜனாாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் அவர்களுடன் இணைந்து வழக்கு ஒன்றினைத் தொடர்வதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.
அந்த வழக்கினைத் தொடர்வதற்கு பாரிய அளவில் ஆவணங்களைத் திரட்டியுள்ளோம். வழக்குத் தொடர்வதற்கான பெரும்பகுதி வேலைத்திட்டங்கள் முடிவுற்றுள்ளன. எனவே விரைவில் வழக்குத் தொடரப்படும்.
அவ்வாறு எம்மால் தொடரப்படும் வழக்கின் ஊடாக, தமிழர்களின் காணாமல் ஆக்கப்பட்ட வழிபாட்டு அடையாளங்களை மீள நிறுவுவதற்கும், எமது பூர்வீக குருந்தூர்மலையில் இடம்பெறும் பௌத்த மயமாக்கல் செயற்பாட்டை தடுப்பதற்குமான முழுயற்சிகளையும் தீவிரமாக மேற்கொள்வோம் – என்றார்.
http://Facebook page / easy 24 news