2020/2021 ஆண்டுக்கான இணையத்தளம் வழியாக பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் நடவடிக்கை இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.
2020/2021 ஆண்டு பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கும் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான வழி காட்டி கைநூலை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் www.ugc.ac.lk என்ற இணையதளத்தில் மாத்திரமே பதிவிறக்கம் செய்து மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.