போட்ஸ்வானான் வைர நிறுவனமான டெப்ஸ்வானா 1,098 காரட் எடையுள்ள வைரக் கல்லை கண்டுபிடித்துள்ளது.
உலகில் கண்டறியப்பட்ட மூன்றாவது பெரிய வைரக் கல் இதுவென விவரிக்கப்படுகிறது.
ஜூன் 1 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட இந்த கல், புதன்கிழமை தலைநகர் கபோரோனில் உள்ள ஜனாதிபதி மொக்வீட்ஸி மாசிசியின் பார்வைக்காக காண்பிக்கப்பட்டது.
இன்னும் பெயரிடப்படாத இந்த கல், 73 மி.மீ நீளம், 52 மி.மீ அகலம் மற்றும் 27 மி.மீ தடிமன் கொண்டது.
இது டெப்ஸ்வானாவின் வரலாற்றில் காணப்படும் மாணிக்க தரத்தின் மிகப்பெரிய கல் ஆகும்,
இது அரசாங்கத்திற்கும் உலகளாவிய வைர நிறுவனமான டி பியர்ஸுக்கும் இடையிலான ஒரு கூட்டு முயற்சியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய வைரக் கல் குல்லினம் என அழைக்கப்படும் வைரக் கல் ஆகும். இது 1905 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் எடை 3,106 காரட் ஆகும்.
இரண்டாவது வைரக் கல் ‘லெசெடி லா ரோனா’ என்று அழைக்கப்படும் வைரக் கல் ஆகும். இது 2015 ஆம் ஆண்டில் வடகிழக்கு போட்ஸ்வானாவின் கரோவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் எடை 1,109 காரட் ஆகும்.
போட்ஸ்வானா ஆப்பிரிக்காவின் முன்னணி வைர உற்பத்தியாளர் நாடாகும்.