டுபாயிக்கு தப்பி சென்றுள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘ஹரக் கட்டா’ எனப்படும் நந்துன் சிந்தக்க என்பவரின் போதை பொருட்களை விற்பனை செய்யும் பெண் ஒருவர் உள்ளிட்ட 7 பேர் வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் ஹங்வெல்ல பகுதியிலும் இருவர் வெலிகம பகுதியிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனைய இருவர் மாத்தறை பகுதியில் கைதாகினர்.
நிட்டம்புவ பகுதியில் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 13 ஏ.டி.எம். அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து கடந்த வாரத்தில் ஒரு கோடி ரூபாவுக்கு அதிக தொகை மாற்றப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் ஹங்வெல்ல பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேககநபரிடம் இருந்து 720,000 ரூபாவும் 8 ஏ.டி.எம். அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.