வவுனியா பாலமோட்டை கிராமத்தை சேர்ந்த இளைஞர்களால் கசிப்பு பெரல் ஒன்று கைப்பெற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
பாலமோட்டை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்குளம் கிராமத்தில் தொடர்ச்சியாக கசிப்பு விற்பனை நடைபெற்று வந்த நிலையில், பாலமோட்டை இளைஞர்கள் தங்கள் முயற்சியால் நேற்று (16) இரவு கசிப்பு பெரல் ஒன்றை கைப்பற்றி அழித்துள்ளனர்.
பனிச்சங்குளம் ஆத்துக்காணி என்ற பகுதியில் கசிப்பு காய்ச்சுவதற்கு தயாரான நிலையில் வைக்கப்ட்டிருந்த ஒரு பெரல் ‘கோடா’ கிராமத்து இளைஞர்களால் அழிக்கப்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் கசிப்பு காய்ச்சுவதற்கு தயாராக இருந்த நபர்கள் கிராமத்து இளைஞர்களை பார்த்ததும் தப்பி ஒடியதாக இளைஞர்கள் தெரிவித்தனர்.