இணைய வழியில் மதுபானத்தை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தினால் மதுவரி கட்டளைச் சட்டம் மீறப்படுவதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அந்த மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன் மதுபானசாலை திறக்கப்பட கூடிய விதம், விற்பனை செய்யக் கூடிய வயதெல்லை மற்றும் வழங்கப்படும் கால எல்லை உள்ளிட்ட சகல விதிகளும் மீறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திற்கு அமைய 21 வயதுக்கு குறைந்தோருக்கு மதுபானம் மற்றும் புகையிலையிலான உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
எனினும் இணையவழியில் மதுபானம் விற்பனை செய்யப்படுமாயின் அந்த விதிகள் மீறப்படும் என மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் இணையவழியில் மதுபானம் விற்பனை செய்யப்படுமாயின் அதனை மட்டுப்படுத்தப்பட்ட தரப்பினரால் மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும் எனவும் கொள்வனவு செய்யப்பட்ட மதுபானத்தை அதிக விலைக்கு மீண்டும் விற்பனை செய்யக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.