ஹபரடுவ சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் 90,000 ரூபா பெறுமதியான 30 சைனோபாம் தடுப்பூசிகள் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் பணிமனையில் சாரதி மற்றும் சிற்றூழியரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேற்படி சுகாதார பணிமனையில் திருடப்பட்ட தடுப்பூசிகள் தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரியினால் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்தே இவர்கள் இருவருக்கும் எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.