முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கொக்கிளாய் கிழக்கு கடற்கரையில் நேற்றைய தினம் (16) மாலை மீனவர்களின் கரைவலையில் புள்ளி சுறா ஒன்று அகப்பட்டுள்ளது
மீனவர்கள் கரைவலைத் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர்களுடைய வலையில் சிக்கிய குறித்த புள்ளி சுறா கரைக்கு வந்துள்ளது.
இந்நிலையில் குறித்த புள்ளி சுறா வினை மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைத்துள்ளனர்