முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு வென்டிலெட்டர் கருவி ஒன்று நேற்று மாலை 4.30 மணிக்கு அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
ஜக்கிய இராச்சிய மக்ககள் நலன் காப்பகம், ஜக்கிய இராச்சிய குழந்தைகள் பசி நிவாரண நிதியம் ஆகியன இணைந்து 53.5 இலட்சம் ரூபா பெறுமியான வென்டிலெட்டர் இயந்திரம் ஒன்றினை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளார்கள்.
நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் தொற்றாளர்கள் அதிகரித்து செல்லும் நிலையில் மாவட்ட மருத்துவமனையில் சுவாச இயந்திரம் உள்ளிட்ட அவசர மருத்துவ சிகிச்சை உபகரணங்கள் பற்றாக்குறையாக காணப்பட்டுள்ளது.
இன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ சங்கம் கொடையாளர்களிடம் இருந்து அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் தேவை என்ற கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இதற்கமைய ஜக்கியஇராச்சியத்தில் உள்ள குழந்தைகள் பசி நிவாரண நிதியம்,ஜக்கிய இராச்சிய மக்கள் நலன் காப்பகம் ஆகிய இரண்டு அமைப்புக்களும் இணைந்து 53.5 இலட்சம் பெறுமதியான வென்டிலெட்டர் இயந்திரத்தினை வழங்கி வைத்துள்ளனர் .
இதனை விட கொரோனா மருத்துவமனை நிர்மானத்திற்காக மக்கள் நலன் காப்பகத்தினால் இரண்டு இலட்சம் ரூபா பண உதவியும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் மத தலைவர்கள் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மு.உமாசங்கர் மக்கள் நலன் காப்பகம் உத்தியோகத்தர்கள் குழந்தைகள் பசி நிவாரண நிதிய ஊழியர்கள் வைத்தியர்கள் தாதியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்