தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, நாண், சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த கொத்தமல்லி – உருளைக்கிழங்கு வறுவல். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 3,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – 3 டீஸ்பூன்.
அரைக்க…
கொத்தமல்லி – 1/2 கப்,
பச்சை மிளகாய் – 2,
பூண்டு – 3.
செய்முறை
உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து, தோல் நீக்கி, நறுக்கிக் கொள்ளவும்.
மிக்ஸியில் அரைக்க வேண்டிய பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை உருளைக்கிழங்குடன் சேர்த்து கலந்து 15 நிமிடங்கள் ஊற விடவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு வறுக்கவும். சாதத்துடன் பரிமாறவும்.