கோபன்ஹேகனில் நடைபெற்ற பின்லாந்துக்கு எதிரான தனது நாட்டின் யூரோ 2020 தொடக்க ஆட்டத்தின் போது டென்மார்க் நட்சத்திரம் கிறிஸ்டியன் எரிக்சன் மயக்கமடைந்து, ஆடுகளத்தில் சுருண்டு வீழ்ந்துள்ளார்.
இதனால் இரு அணிகளின் வீரர்களும் அதிர்ச்சியடைந்ததுடன், மன உளைச்சலுக்கும் ஆளானார்கள்.
அதன் பின்னர் மருத்துவ குழுவினர் உடனடியாக அவருக்கு ஆடுகளத்திலே 10 நிமிடங்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
அதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் “கிறிஸ்டியன் எரிக்சன் கண் விழித்துவிட்டதாகவும் , மேலும் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார் என்று டேனிஷ் கால்பந்து யூனியன் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் கழித்து ஆட்டம் மீண்டும் துவங்க டென்மார்க் அணியை 1-0 என்ற கணக்கில் பின்லாந்து அணி வீழ்த்தியது.