கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடு ஊற்றுப் பகுதியில் கேரள கஞ்சா வீட்டில் ஒழித்து வைத்திருந்த இருவரை கிண்ணியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் கிண்ணியா நடு ஊற்றுப் பகுதியில் இடம் பெற்றது.
இதன்போது கிண்ணியா புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரும், கிண்ணியா சூரங்கல் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவருமே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இவர்களிடமிருந்து 135 கிராம் கேரள கஞ்சாவும் , தராசு ஒன்றும் கைப்பற்றப் பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் கிண்ணியா பொலிஸார், திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.