நாட்டில் தற்போது பயன்படுத்தப்படுகின்ற தொலைக்காணொளி மூலமான கல்விமுறை 60 சதவீதம் தோல்வி அடைந்துள்ளமை தெரியவந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது
தொலைக்காணொளி மூலமான கல்வி முறைமை தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களில் தொலைக்காணொளி கல்வி முறைமையில் நிலவும் நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு இல்லை என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை பிபில – லுணுகல – பல்லேகுருவ பகுதியில் தொலைத்தொடர்பு வசதி இன்மையால் பாடசாலை மாணவர்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கி உள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.