வவுனியாவில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் நேற்று இரவு (07) வெளியாகின.
அதில், மகாறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த நான்கு பேருக்கும், தெற்கு இலுப்பைக்குளம் பகுதியை சேர்ந்த மூன்று பேருக்கும், சகாயாமாதாபுரம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், கரப்பங்காடு பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், குருமன்காடு பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், சாந்தசோலை பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் என 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.