உள்நாட்டு டி-20 லீக்கின் அதிகரிப்பு சர்வதேச கிரிக்கெட்டுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் தலைவர் ஃபாஃப் டு பிளெசிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் உள்ளூர் மற்றும் சர்வதேச விளையாட்டுகளை சமநிலைப்படுத்த ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை உட்பட அனைத்து சிறந்த கிரிக்கெட் விளையாடும் நாடுகளும் தங்களது சொந்த டி-20 லீக்குகளைக் கொண்டுள்ளன.
பல கரீபியன் தீவுகள் மற்றும் பிற பிராந்தியங்களை குழுவாகக் கொண்ட மேற்கிந்தியத் தீவுகளும் அதன் சொந்த லீக்கைக் கொண்டுள்ளன.
இது எதிர்காலத்தில் முன்னேறும் தேர்வாக மாறினால், அது சர்வதேச விளையாட்டுக்கு உண்மையான அச்சுறுத்தலாக இருக்கும் என்று பாகிஸ்தான் சூப்பர் லீக் டி-20 போட்டிக்காக அபுதாபியில் இருக்கும் டு பிளெசிஸ், ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஒரு மெய்நிகர் செய்தி மாநாட்டில் கூறினார்.