ஆப்கானிய தலைநகர் காபூபில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கள் குறைந்தது 10 பேரின் உயிரை காவு கொண்டதுடன், நகரத்தை இருளில் மூழ்கடித்தாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் மேற்கு காபூல் சுற்றுப்புறத்தின் தனித்தனி இடங்களில் இரண்டு குண்டுகள் வெடித்தன, அதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர் என்று அந் நாட்டு உள்துறை அமைச்சகத்தின் துணை செய்தித் தொடர்பாளர் சையத் ஹமீத் ருஷன் உறுதிபடுத்தினார்.
மூன்றாவது குண்டு வெடிப்பு வடக்கு காபூலின் ஒரு மின்சார நிலையத்தை பெரிதும் சேதப்படுத்தியது என்று அரசாங்க மின்சாரம் துறையின் செய்தித் தொடர்பாளர் சங்கர் நயாசாய் தெரிவித்தார்.
ஆரம்ப இரண்டு குண்டுவெடிப்புகள், பொது போக்குவரத்து மினி பஸ்களை குறிவைத்து மாலை வேளைகளில் மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் சாதனங்களால் தலைநகரின் பெரும்பாலும் ஷியைட் இனத்தவர்கள் வசிக்கும் பகுதியில் ஹசாரா பகுதியில் வெடிக்க வைக்கப்பட்டது.
குண்டுவெடிப்புக்கான பொறுப்பு உடனடியாக வெளிவரவில்லை.