ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸால் பல நாடுகளிலும் ஏராளமான மக்கள் மரணித்துள்ளனர். இதனால் ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு உயிரிழப்பு பதிவாகியவண்ணமே உள்ளது.
மனைவியை இழந்த கணவர், கணவனை இழந்த மனைவி, பெற்றோரை இழந்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த பெற்றோர் என எங்கு பார்த்தாலும் உயிரிழப்புக்கள் கூறமுடியாத சோகத்தை ஏற்படுத்துகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவிலும் 43 ஆயிரம் குழந்தைகள் தமது, தாய்- தந்தை இருவரையுமோ அல்லது அவர்களில் யாராவது ஒருவரையோ இழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க குழந்தைகளில் கருப்பின குழந்தைகளின் எண்ணிக்கை 14 சதவீதமாகும். ஆனால் பெற்றோரை இழந்த குழந்தைகள் என்று கணக்கிட்டு பார்த்தால் 20 சதவீத கருப்பின குழந்தைகளே தங்களது பெற்றோரை இழந்துள்ளமை தெரியவருகிறது. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தும் விடயமாகும்.