வெல்லம்பிட்டிப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் காவற்துறை விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில்129 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் சந்தேகநபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட கஞ்சா தொகையுடன் குடும்பஸ்தரான சந்தேகநபர் காவற்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
37 வயதான குறித்த சந்தேகநபர் தெமட்டகொடை – வேலுவன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, அம்பாந்தோட்டை – சூரியவெவ பகுதியில் வைத்து காவற்துறையினர் விசேட அதிரடிப் டையினரால் 3 ஆயிரம் கஞ்சா செடிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து குறித்த சந்தேகநபர் எம்பிலிப்பிட்டிய நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று காவற்துறையினர் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.