உலகின் பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள, திரிபடைந்த கொரோனா வைரஸ்களுக்கு, உலக சுகாதார ஸ்தாபனம் பெயர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, கிரேக்க எழுத்துக்களைப் பயன்படுத்தி, இந்த திரிபடைந்த கொரோனா வைரஸ்கள் பெயரிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய கொரோனா திரிபுக்கு அல்பா (Alpha) என்றும், தென்னாபிரிக்க திரிபுக்கு பீ(ட்)டா (Beta) என்றும், இந்திய திரிபுக்கு டெல்டா (Delta) என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
இது, விவாதங்களை எளிதாக்குவதோடு, பெயர்கள் தொடர்பான சில களங்கங்களை அகற்ற உதவுவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
கடந்த மாத ஆரம்பத்தில், இந்தியாவில் கண்டறிப்பட்ட( B )வி.1.617.2 என்ற கொரோனா வைரஸ் திரிபின் பெயரை, இந்திய திரிபு என இந்திய அரசாங்கம் தெரிவித்திருந்த நிலையில், உலக சுகாதார ஸ்தாபனம் அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
வைரஸ் திரிபுகளைக் கண்டறிந்து அறிக்கையிடுவதில், எந்தவொரு நாடும் களங்கம் ஏற்படுத்தக் கூடாது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவிட்-19 தொழில்நுட்பக்குழு தலைவரான மரிய வென் கரகோவ், ருடவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மாறுபாடுகளின் ‘வலுவான கண்காணிப்பு’ மற்றும் பரவலைத் தடுக்க விஞ்ஞான தரவுகளைப் பகிர்வதற்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.