இந்தோனேசிய தீவுக்கூட்டத்தில் உள்ள சனானா துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்றில் திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
கே,எம். கர்யா இந்தாஹ் என்ற கப்பலிலேயே குறித்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், விபத்து ஏற்படும் போது குறித்த கப்பலில் 275 பேர் வரையில் பயணித்துள்ளனர்.
ஏற்பட்ட தீயையடுத்து அதில் பயணித்த 275 பேரில் 274 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், 43 வயதான ஒருவர் மாத்திரமே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த நபரை தேடும் பணிகளில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.