பங்களாதேஷ் அணிக்கெதிரான மூன்றாவதும் கடைசியமான போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரான துஷ்மன்த்த சமீர 16 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி இலங்கையின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தெரிவானார்.
இந்நிலையில், நேற்றைய போட்டியில் அவர் கைப்பற்றிய 5 விக்கெட் குவியலானது சர்வதேச ஒருநாள் போட்டியரங்கில் இலங்கை கிரிக்கெட் வீரரொருவர் 30 மாதங்களுக்குப் பின்னர் கைப்பற்றிய 5 விக்கெட் குவியலாகும்.
இலங்கை அணிக்காக சர்வதேச ஒரு நாள் போட்டி அரங்கில் கடைசியாக 5 விக்கெட் குவியலை ‘யோர்கர் மன்னன்’ லசித் மாலிங்க கைப்பற்றியிருந்தார்.
2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி இங்கிலாந்து அணிக்கெதிராக தம்புள்ளையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் லசித் மாலிங்க 9 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 44 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
இருந்தபோதிலும், இப்போட்டியில் இலங்கை அணி டக்வேர்த் லூயிஸ் விதிப்படி 31 ஓட்டங்களால் இங்கிலாந்திடம் தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.