அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 2022 ஆம் ஆண்டுக்கான தனது பாதீட்டு ஒதுக்கத்தை அறிவித்துள்ளார்.
இதற்காக அவர் 6 ட்ரில்லியன் டொலர்களுக்கான முன்மொழிவை அறிவித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாம் உலகப் போரின் பின்னர் இந்த அளவுக்கான பாதீடு ஒன்றை அமெரிக்கா கண்டதில்லை என்று கூறப்படுகிறது.
இது முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் கடந்த ஆண்டு முன்மொழியப்பட்ட 4.8 ட்ரில்லியன் டொலருக்கான பாதீட்டை விட அதிகமாகும்.
இந்த பாதீட்டு முன்மொழிவு காங்கிரஸில் முன்வைக்கப்பட்டு அதன் அனுமதிக்குப் பின்னரே அமுலுக்கு வரும் என தெரியவந்துள்ளது.