சுயதனிமை விதிமுறைகளை மீறி அனுமதி பத்திரமின்றி மதுபானம் விற்பனை செய்த ஒருவரை பொகவந்தலாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பொகவந்தலாவை கொப்பியன் தோட்டத்தில் வீடு ஒன்றில் அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 23 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபரை காவல்துறை பிணையில் விடுதலை செய்துள்ளதுடன் வழக்கு பதிவு செய்து ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொகவந்தலாவை காவல் நிலைய பொறுப்பதிகாரி சாந்த பண்டார தெரிவித்தார்.