ஈழ எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவல் சிங்களத்தில் வெளியாகின்றது.
போர்ச் சூழலில் பிறந்த ஒரு போராளிக்கும் அவனது தம்பிக்கும் இடையிலான பாசமாகவும் பார்வையாகவும் அமையும் நடுகல் தமிழில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியிருந்தது.இது தொடர்பில் தீபச்செல்வன் முகநூலில் தெரிவித்துள்ளதாவது, நடுகல் நாவல் சிங்களத்தில் வெளியாகிறது. என் எழுத்து வாழ்வில் இது குறிப்பிடத்தக்க நிகழ்வு. நடுகல் நாவலுக்கு கிடைத்த பெரும் அங்கீகாரம். இந்த நாவல் சிங்களத்தில் வருகிறது என்று அறிந்து பல சிங்கள நண்பர்கள் அன்பையும் மகிழ்வையும் பகிர்ந்து கொண்டார்கள் என்று கூறினார். அத்துடன் நடுகல் வழியாக போர் மண்ணின் இரண்டு சிறுவர்கள் சிங்கள மக்களிடத்தில் மேற்கொள்ளும் உரையாடல் ஈழ தமிழர் வாழ்வையும் தவிப்பையும் அவர்களுக்கு உணர்த்தும் என்றும் நாவலின் தமிழ்ப் பிரதி முழுமையாகவும் நேர்மையாகவும் மொழியாக்கம் செய்யப்பட்ட வேண்டும் என்பதற்காக மொழிபெயர்ப்பாளர் ஜீ.ஜீ.சரத் ஆனந்தா எடுத்த உழைப்பும் வெளியீட்டு முயற்சியும் சாதாரணமானதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கள எழுத்தாளர் ஜீ.ஜீ.சரத் ஆனந்தா நாவலை மொழியாக்கம் செய்துள்ளார். கடுல்ல என்ற சிங்களப் பதிப்பகம் வெளியிடுகின்றது. http://Facebook page / easy 24 news