இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்தில் 23 சதவீதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும் உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஒரு வாரத்தில் உலகளவில் கொரோனாவினால் புதிதாக பாதிக்கப்படுவோர், உயிரிழப்போரின் எண்ணிக்கை சரிந்துள்ளது.
இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸான பி.1.617 என்ற வைரஸ் தற்போது உலகளவில் 53 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்தவகை வைரஸ்கள் மூன்று வகைகளாக உள்ளன.
கடந்த ஏழு நாட்களில் இந்தியாவில் 18 இலட்சத்து 46 ஆயிரத்து 55 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது 23 சதவீதம் குறைவாகும்’ எனத் தெரிவித்துள்ளது.