தொடர்ந்து நான்காவது முறையாக சிரியா அதிபராக பஷார் அல் அசாத் (Bashar al-Assad) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சிரியாவில் கடந்த பத்தாண்டுகளாக நடக்கும் உள்நாட்டு போர்களுக்கு மத்தியில் நடந்த தேர்தலில் அதிபர் பஷார் அல் அசாத் 95 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான சிரியர்கள் வீதிகளில் திரண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
தந்தையின் மறைவைத் தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு முதல் அதிபர் பதவி வகித்து வரும் பஷார் அசாத் மேலும் 7 ஆண்டுகளுக்கு அதிபராக நீட்டிப்பார் என எதிர்பார்க்கப்படுக்றது.