தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சிரஞ்சீவி. இவர் தற்போது ரீமேக் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இவர் கைவசம் மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக் மற்றும் தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘வேதாளம்’ படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகிய படங்கள் உள்ளன. ஆச்சார்யா படத்தில் நடித்து முடித்ததும் இந்த 2 படங்களிலும் நடிக்க சிரஞ்சீவி திட்டமிட்டுள்ளார்.
சிரஞ்சீவி
இந்நிலையில், நடிகர் சிரஞ்சிவி மேலும் ஒரு தமிழ் படத்தின் ரீமேக்கில் நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தை தான் சிரஞ்சீவி தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளாராம். பிரபாஸின் ‘சாஹோ’ படத்தை இயக்கிய சுஜித்திடம் ‘என்னை அறிந்தால்’ படத்தின் கதையை தனக்கேற்றபடி மாற்றியமைக்க சொல்லி உள்ளாராம் சிரஞ்சீவி. தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறதாம்.