ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் உள்பட 17 நாடுகளை சேர்ந்த 150 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நேற்று தொடங்கியது. 31-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் உள்பட 17 நாடுகளை சேர்ந்த 150 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
தொடக்க நாளில் நடந்த ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் முகமது ஹூசாமுதீன் 5-0 என்ற கணக்கில் கஜகஸ்தானின் 19 வயது மக்முத் சபிர்கானை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.