இரண்டு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அவர்களின் பந்துவீச்சு பயிற்சியாளர் கொவிட்-19 க்கு சாதகமாக சோதனை செய்த போதிலும் பங்களாதேஷுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.
இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் சமிந்தா வாஸ் மற்றும் வீரர்களான இசுரு உதனா மற்றும் ஷிரான் பெர்னாண்டோ ஆகியோர் கொவிட்-19 பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் இன்று காலை தெரிவித்தனர்.
அதன் பின்னர் அவர்கள் இரண்டாவது பரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், சோதனை முடிவுகளுக்காக காத்துள்ளதாகவும் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரிய பணிப்பாளர் ஜலால் யூனுஸ் AFP யிடம் இடம் கூறினார்.
இந் நிலையில் இரண்டாவது சோதனை முடிவுகளில் ஷிரான் பெர்னாண்டோ கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளமை மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எனினும் இசுரு உதனா மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் சமிந்த வாஸ் இருவரும் கொரோனா தொற்றுக்கு எதிர்மறையாக சோதனை செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
இதனால் போட்டிகள் திட்டமிடப்பட்டபடி முன்னேறும் என்று பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் உறுதிபடுத்தியுள்ளது.