பிரித்தானியாவில் கடலில் மூழ்கிய தமிழர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்!! (விபரங்கள் உள்ளே
)

பிரித்தானிய கடலில் மூழ்கி உயிரிழந்த இலங்கை புதுக்குடியிருப்பைச்சேர்ந்த இருவருடன் மொத்தமாக ஐந்து பேரின் சடலங்கள் அவர்களின் உறவினரால் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. ந்த வகையில் சகோதரர்களான கோபிகாந் கேனுயன் மற்றும் இந்துஷன் நிதர்சன் அத்துடன் குரு ஆகியோரின் சடலங்கள் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும்.
இங்கிலாந்தின் சஸ்செக்ஸ் பிராந்தியத்தின் கம்பர் சான்ட் கடற்கரையில், நேற்று (புதன்கிழமை), 5 சடலங்கள் கண்டடெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பது அறியவருகிறது இறந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் மேலும் ஒருவரும் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
அதிகளவு வெப்பநிலை நிலவுவதால் கம்பர் சான்ட் கடற்கரைக்கு பெருமளவான மக்கள் வருகை தருவதோடு, கடல் விளையாட்டுக்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று கடலில் மூழ்கி காணாமல் போன மூன்று ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு சுமார் மூன்று மணிநேரத்தின் பின்னர், மேலுமிரு சடலங்கள் கரையொதுங்கியதாகக் கூறப்படுகின்றது.
அத்தோடு, மேலுமொருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், ஹெலிக்கொப்டரின் உதவியுடன் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அப்பிராந்தியப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் நேற்று வரையில், இங்கிலாந்து முழுவதும் கடலில் குளிக்கச் சென்ற 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சென்ற கிழமையும் இலங்கைத்தமிழர் ஒருவர் கடலில் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற ஆபத்தான கடல்கரைகளில் , மக்கள் குளிப்பதை உடனே தவிர்க்குமாறு பொலிசார் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.