இலங்கையில் நேற்று (20.05.2021) கொரோனா வைரஸ் தொற்றால் 38 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதயைடுத்து, மொத்த கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,089 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் நாட்டில் கொவிட் 19 நோய்த்தொற்றின் மிக அதிகமான தினசரி இறப்பு எண்ணிக்கை இதுவாகும்.
இதுவே இலங்கையில் அதிகரித்த உயிரிழப்பு பதிவான முதல் சந்தர்ப்பமாகும். இது மே 7 ஆம் திகதி முதல் மே 20 ஆம் திகதி வரை பதிவான உயிரிழப்புகளில் ஒரே நாளில் பதிவான அதிகரித்த உயிரிழப்புகளாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் 19 பேர் பெண்களும், 19 பேர் ஆண்களும் அடங்குவர்.