இயக்குனர் அஹமத் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் கதையின் நாயகனாக நடிகர் ஜெயம் ரவி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அஹமத் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக நடிக்க ஜெயம் ரவி ஒப்பந்தமாகியிருக்கிறார். ஜெயம் ரவி மற்றும் இயக்குனர் அஹமத் ஆகிய இருவரும் இணைந்து தற்போது ‘ஜனகணமன’ என்ற படத்தை உருவாக்கி வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. கொரோனாத் தொற்று காரணமாக வெளிநாடுகளில் நடத்த வேண்டிய படப்பிடிப்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் ‘ஜனகனமன’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்ய இருக்கிறார்கள். இதனிடையே இந்தியாவில் படப்பிடிப்பு நடத்தி நிறைவு செய்யும் வகையில் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்குனர் அஹமத் இயக்க, ஜெயம் ரவி கதையின் நாயகனாக நடிக்கிறார்.
இருவரும் இணைந்து மீண்டும் உருவாக்கும் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இந்த திரைப்படம், ‘ஜனகனமன’ என்ற திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முன்னரே வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள் என்பதும், ஜெயம் ரவியின் நடிப்பில் கடைசியாக ‘பூமி’ திரைப்படம் டிஜிற்றல் தளத்தில் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.