தொடர்ச்சியாக கொரோனா நோயாளிகளின் மரணங்களை காண நேரிடும் இளம் மருத்துவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக மூத்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹைதரபாத்தை சேர்ந்த கிங் கோட்டி மருத்துவமனையின் கூடுதல் மருத்துவ கண்காணிப்பாளரான ஜலஜா இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக கோவிட் பேரிடர் காலத்தில் மருத்துவர்கள் போதிய ஓய்வின்றி இடைவிடாது பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.
இரண்டாம் அலை தீவிரம் அடைந்த நிலையில் மருத்துவர்களும் திணறி வருகின்றனர் என்று அவர் கூறினார். பட்டம் பெற்று புதிதாக பணியில் சேர்ந்த இளம் மருத்துவர்களும் பயிற்சி மருத்துவர்களும் இந்தப் பெருந்தொற்றால் ஏற்படும் மரணங்களைக் கண்டு மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பது தமக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் மூலம் தாம் அறிந்துக் கொண்டதாக டாக்டர் ஜலஜா தெரிவித்தார்.
ஆயினும் மீண்டும் அவர்கள் பணிக்குத் திரும்புவதாகவும் குறிப்பிட்ட அவர் , மூத்த அனுபவம் மிக்க மருத்துவர்கள் கூட தங்கள் வாழ்நாளில் இத்தனை மரணங்களை சந்தித்தது இல்லை என்றார்.