ரசிகர்களின் தீர்ப்பால் மெய்சிலிர்த்துப் போன மெஸ்ஸி: செம வீடியோ
2015-2016ம் ஆண்டின் ஐரோப்பாவின் சிறந்த கோலுக்கான விருதை பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தட்டிச்சென்றார்.
கடந்த நவம்பர் மாதம் பார்சிலோனா கேம்ப் நவ் மைதானத்தில் நடந்த சாம்பியன்ஸ் லீக் முதல் சுற்றில் பார்சிலோனா – ரோமா அணிகள் மோதின.
குறித்த போட்டியில் ரோமா அணிக்கு எதிராக பார்சிலோனா வீரர் மெஸ்ஸி அடித்த கோலே ஆண்டின் சிறந்த கோலாக ரசிகர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஆட்டத்தில் பார்சிலோனா அணி 6-1 என்ற கோல் கணக்கில் ரோமா அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
வாக்கு எண்ணிக்கை முடிவில் மெஸ்ஸி 34 சதவீத வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்து விருதை தட்டிச்சென்றுள்ளார்.
13 சதவீத வாக்குகள் பெற்று பிரேசிலிய வீரர் Ricardinho இரண்டாவது இடத்தையும், 11 சதவீத வாக்குகள் பெற்று சுவிஸ் வீரர் XherdanShaqiri மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.