நாடு முழுவதும் கொவிட் பரவல் காரணமாக சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுகின்றதுடன், சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகின்றன.
இதற்கமைய,திருகோணமலை மாவட்டத்தின் உப்புவெளி காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆண்டான்குளம் கிராம சேவகர் பிரிவின் சுபத்ரலங்கார வீதி மற்றும் சீனக்குடா காவல்துறை பிரிவுக்குட்பட்ட காவட்டிகுடா கிராம வேசகர் பிரிவுக்குட்பட்ட லக்கி விஜேவர்தன வீதி என்பன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்டத்தின் தொடாங்கொட காவல்துறை பிரிவிற்குட்பட்ட பொம்புலுவ வடமேற்கு, தென்மேற்கு, வடமத்திய, தென்மத்திய, தென்கிழக்கு, வடகிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு காவல்துறை பிரிவிற்குட்பட்ட திஸ்ஸவீரசிங்கம் சதுக்கம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.