கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை புறக்கணிக்காமல் அவற்றுக்கு அரசாங்கம் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
செயற்பாடுகளுக்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை காணொளியூடாக விசேட அறிவித்தலை விடுத்து இதனைத் தெரிவித்துள்ள அவர் அதில் மேலும் கூறியிருப்பதாவது :
கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக நாடு பாரிய சரிவை சந்தித்துள்ளது.
தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக மக்கள் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதுடன் , பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்துள்ளது.
மக்களின் பிரச்சினைகள் மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுக்கான கூடிய தலைவர் ஒருவர் இல்லாததன் காரணமாகவே இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதனால் ,அரசாங்கம் சாதாரண மக்களின் பொருளாதார நிலைமைக்கு சக்தியாக செயற்பட வேண்டும்.
இதேவேளை சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கான வங்கி கடன்கள் , வாகன காப்புறுதிகளை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட காலவகசத்தை மேலும் நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்நிலையில் மக்களின் பசியை போக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதுடன் , மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
பாராளுமன்றம் ஊடாக நிதி நிலைமைகளை முன்னேற்றுவதற்கு எதிர்க்கட்சி என்றவகையில் நாம் தயாராகவுள்ளோம்.
பொருளாதார சமூகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை கருத்திற்கொண்டு சிந்தித்து செயலாற்றுங்கள்.
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுங்கள். பிரச்சினைகளை புறக்கணிக்காமல் , அவற்றுக்கு முகங்கொடுங்கள்.
இந்நிலையில் எதிர்கட்சி என்ற வகையில் நிதி ஒதுக்கீடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது மற்றுமட்னி அரசாங்கம் மக்களுக்கு இந்த நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கின்றதா என்பது தொடர்பிலும் நாம் அவதானமாக இருக்கின்றோம்.