இந்த ஆண்டு இதுவரை வந்த படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்- முழுவதும்
2016 தொடங்கி 8 மாதங்கள் முடியவுள்ளது. கோலிவுட்டில் கிட்டத்தட்ட 100 படங்கள் வரை வந்துவிட்டது, இதில் வழக்கம் போல் ஹிட் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணி விடலாம்.
தமிழகத்தில் கோயமுத்தூருக்கு பிறகு அதிக வசூல் வரும் ஏரியா சென்னை பகுதி தான். இதில் இந்த வருடம் இந்த பகுதியில் அதிகம் வசூலித்த படங்கள் ஒரு பார்வை.
- கபாலி- 13.5 கோடி
- தெறி- 11 கோடி
- 24- ரூ 5. 25 கோடி
- தோழா- ரூ 3.76 கோடி
- ரஜினி முருகன்- ரூ 3.54 கோடி
- ஜங்கிள் புக்(ஹாலிவுட்)- ரூ 3.30 கோடி
- இறுதிச்சுற்று- ரூ 3.21 கோடி
- அரண்மனை 2- ரூ 3 கோடி
- இது நம்ம ஆளு- ரூ 3 கோடி
- காதலும் கடந்து போகும்- ரூ 2.88 கோடி
- மிருதன்- ரூ 2.6 கோடி
- கான்ஜுரிங் 2 (ஹாலிவுட்)- ரூ 2.6 கோடி
- மனிதன்- ரூ 2.55 கோடி
- பிச்சைக்காரன்- ரூ 2.53 கோடி
- சேதுபதி- ரூ 2.5 கோடி
- சுல்தான் (பாலிவுட்)- ரூ 2.25 கோடி
- மருது- ரூ 2 கோடி
- வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்- 1.8 கோடி
இனி ரெமோ, சிங்கம்-3, காஷ்மோரோ, சபாஷ் நாயுடு, தொடரி, கொடி, இருமுகன், அச்சம் என்பது மடமையடா, தர்மதுரை, போகன், கத்திச்சண்டை, கவலை வேண்டாம் ஆகிய படங்கள் வரிசைக்கட்டி நிற்க எந்த படம் எந்த இடத்தை பிடிக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.