திருடப்பட்ட சிறிய விமானம் பாரிய விபத்திற்குள்ளாகியது.
கனடா-ரொறொன்ரோ-பீற்றபொரோ என்ற இடத்தில் சிறிய விமானம் ஒன்று வெள்ளிக்கிழமை காலை பாரிய மோதலுக்குள்ளாகியது. இந்த விமானம் மார்க்கம் விமான நிலையத்தில் இருந்து திருடப்பட்ட விமானம் என யோர்க் பிராந்திய பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதிகாலை 1-மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.
அவ்விடத்திற்கு விரைந்த மருத்துவ உதவியாளர்கள் விமானியை காப்பாற்ற முயன்ற போதும் அவர் சிறிது நேரத்தில் இறந்து விட்டார்.
விமானத்தில் பைலட் மட்டுமே இருந்தார் என பொலிசார் தெரிவித்துள்ளனர். இவரிடம் விமானம் ஓட்டும் அனுமதிப்பத்திரம் இருந்ததா என்பதும் தெளிவாகவில்லை. விமானம் செலுத்திய அனுபவம் உள்ளவரா என்பதும் தெரியாது. இம்மனிதனுக்கு 20ற்கும்30ற்கும் இடைப்பட்ட வயதிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்திற்கான காரணம் குறித்து புலன் விசாரனை நடைபெறுகின்றது.
சாலை வழியில் தரையிறங்க விமானி முயன்றுள்ளார்.
விமானத்தை திருடியதற்கான காரணம் அல்லது போதை பொருட்கள் ஏதாவது அல்லது சட்டவிரோதமான பொருட்கள் விமானத்தினுள்ளே கண்டுபிடிக்கப்பட்டது குறித்த தகவல்களை அதிகாரிகள் வெளியிட மறுத்து விட்டனர்.
யோர்க் பிராந்திய பொலிசார் விமான திருட்டு குறித்து விசாரனையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தங்களது அதிகார வரம்பிற்குட்பட்டதால் தாங்கள் தலையிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
பீற்றபொரோவின் டவுன்ரவுன் பகுதியின் ஒரு பிசியான வர்த்தக அணுகு சாலையில் விபத்து நடந்துள்ளது.
விமானம் நியு மார்க்கெட்டை சேர்ந்த மனிதரொருவருக்கு சொந்தமான Piper Tomahawk விமானமாகும்.