ஒலிம்பிக் துளிகள்: முதல் தங்கம் வென்ற பிஜி.. சிக்கினார் சீன வீராங்கனை
ரியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் முன்னணி ஜோடியான ஜூவாலா கட்டா- அஸ்வினி பொன்னப்பா ஜோடி, நெதர்லாந்தின் பைக் – மஸ்கன் ஜோடியிடம் தோற்று வெளியேறியது.
ஆடவர்களுக்கான 50 மீற்றர் ரைபிள் ப்ரோன் துப்பாக்கி சுடுதல் தகுதிச் சுற்று போட்டியில் இந்தியாவின் ககன் நரங் மற்றும் செயின் சிங் ஆகியோர் தோல்வியடைந்தனர்.
ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட சீன நீச்சல் வீராங்கனை சென் ஜின்யி ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவர் ஹைட்ரோகுளோரோதயஸைட்’என்ற தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி பங்கேற்ற ஹொக்கி போட்டியின் போது அரங்கிற்குள் அனுமதியின்றி விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் நுழைந்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆனால் இதனை அவர் மறுத்துள்ளார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் அறிமுகமான ரக்பி செவன்ஸ் போட்டியில் பிஜி அணி வெற்றி பெற்று தங்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. ஒட்டுமொத்தமாக ஒலிம்பிக் போட்டியில் பிஜி பெறும் முதல் பதக்கம் இதுதான். எனவே இந்த வெற்றியை பிஜி மக்கள் மிகவும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
ரியோ ஒலிம்பிக் ஆடவர் தனிநபர் வில்வித்தை போட்டியில் கொரிய வீராங்கனையிடம் தோல்வியை தழுவினார் இந்திய வீரர் அடானு தாஸ்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து, ஹங்கேரியின் லாரா சரோஸியையும், சாய்னா நெஹ்வால் பிரேசிலின் வின்சென்டியையும் தோற்டிகத்தனர்.