தாய்லாந்தில் தொடர் குண்டுவெடிப்பு: 4 பேர் பலி
தாய்லாந்தில் ஹூவா ஹின் மாவட்டத்தில் கடற்கரையை ஒட்டி சொகுசு விடுதிகள் அமைந்துள்ள பகுதிகளில் நேற்றிரவு இரண்டு குண்டுகள் வெடித்தன, இதில் பெண் ஒருவர் பலியானார்.
இந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீள்வதற்குள் இன்று காலை மேலும் இரண்டு குண்டுகள் வெடித்தன.
இதுமட்டுமின்றி கடற்கரையோர சுற்றுலாத்தலமான புக்கெட், தீவு நகரமான சுரத் தானி மற்றும் தெற்கு டிராங் ஆகிய பகுதியில் இன்று காலை அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததாக தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதல்களில் இதுவரையிலும் நான்கு பேர் பலியாகியுள்ளனர், பலர் படுகாயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களில் பலரது நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.