லாட்டரி பணத்தில் சிற்றில் வாங்க, இத்தாலி செல்ல விரும்பும் மனிதன்.
கனடா-மிசிசாகாவை சேர்ந்த ஐவர் ஹொலொவே என்பவர் இந்த கோடைகாலத்தை தனது குடும்பத்தினருடன் கழிக்க சிற்றில் ஒன்றை வாடகைக்கு பெற திட்ட மிட்டிருந்தார்.
ஆனால் தற்சமயம் பல கோடிகளிற்கு அதிபதியான இவர் சொந்தமாகவே சிற்றில் ஒன்றை வாங்க உள்ளார்.
ஹொலொவே ஆகஸ்ட் மாதம் 29, 2015ற்கான 6%49 லாட்டரியில் 7-மில்லியன் டொலர்களை வென்றுள்ளார்.
தனது வெற்றியை கணிசமான காலப்பகுதிக்கு தள்ளி வைத்ததற்கான காரணத்தை ஆகஸ்ட் மாதம் 8ந்திகதி வெளியிட்ட அறிக்கையில் விளக்கியுள்ளார்.
லாட்டரி சீட்டை என்வலப் ஒன்றிற்குள் போட்டு கிட்டத்தட்ட ஒரு வருடமாக டிராயரில் பூட்டி வைத்திருந்தார்.
தனது வாழ்க்கையில் சில விடயங்களை கவனிக்க வேண்டி இருந்ததால் இந்த பெரிய வெற்றியை தலைக்குள் போட்டுக்கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
வெற்றி பெற்ற தனது ரிக்கெட்டை கடை ஒன்றில் திரையில் பார்த்ததும் 7பூச்சியங்களை கண்டு ஆச்சரியம் கொண்டதாக கூறினார். $7,000!டொலர்கள் பெரிய தொகை என எண்ணினார்.
சீட்டை மீண்டும் வருடிப்பார்த்த போதுதான் எத்தனை பூச்சியங்கள் உள்ளன என உணர்ந்துள்ளார்.
சிற்றில் ஒன்றை வாங்குவதா இல்லையா என கருதும் அதே சமயம் இத்தாலி பயணம் பற்றியும் ஆலோசனை செய்கின்றார் ஹொலொவே.
நோத் யோர்க்கில் யோர்க் மில்ஸ் வீதியில் அமைந்துள்ள பெற்றோ-கனடா ஒன்றில் லாட்டரி சீட்டை ஹொலொவே வாங்கினார்.