ஒலிம்பிக் குத்துச் சண்டையில் விளையாடிய ஈழத் தமிழர் துளசியின் நிலை!
ரியோடி ஜெனிரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச் சண்டையில் கத்தார் நாட்டு அணிக்காக விளையாடிய ஈழத் தமிழரான துளசி தருமலிங்கம் மங்கோலிய வீரரிடம் தோல்வியடைந்தார்.
ஒலிம்பிக் போட்டிகளில் அண்மையில் விடுதலை பெற்ற நாடுகள், சுதந்திரத்துக்காக போராடும் நாடுகள் போன்றவற்றின் சிறந்த வீரர்கள் பல்வேறு நாட்டு அணிகளில் இடம்பெற்று விளையாடி வருகின்றனர். நடப்பு ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற கொசாவோ வீராங்கனை கடந்த ஒலிம்பிக்கில் வேறு நாட்டுக்காக விளையாடியவர்.
இந்த வரிசையில் ஈழத் தமிழரான துளசி தருமலிங்கம், கத்தார் நாட்டு குத்துச்சண்டை அணியில் இடம்பெற்றிருந்தார். ஜெர்மனியில் வசிக்கும் துளசி தருமலிங்கம், யாழ்ப்பாணம் புலோலியைப் பூர்வீகமாகக் கொண்டவராவர்.
ஒலிம்பிக்கில் கடந்த வாரம் நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில் அர்ஜெண்டினா வீரரை அவர் வீழ்த்தியிருந்தார். நேற்று நடைபெற்ற 64 கிலோ எடை பிரிவின் 32-வது சுற்று ஆட்டத்தில் மங்கோலிய வீரர் சின்சோரிக்குடன் துளசி தருமலிங்கம் மோதினார். 3 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் 3 சுற்றிலுமே மங்கோலிய வீரரே வென்றார். இதனால் துளசி தருமலிங்கம் தோல்வியடைந்து ஒலிம்பிக்கில் இருந்து வெளியேற நேரிடடமை குறிப்பிடத்தக்கதாகும்