மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலைய ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் மேலும் 8 காவற்துறை உத்தியோகத்தர்களுக்கு கொவிட்-19 தொற்றுறதியாளது.
இந்தநிலையில் அந்த பிரிவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் மிரிஹான காவல்துறையின் உப பரிசோதகர் ஒருவரும் 12 பெண் கான்ஸ்டபில்களும் நேற்றைய தினம் ஹபராதுவ தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பபட்டுள்ளனர்.
பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று மிரிஹான காவல்துறையின் சிற்றூர்ண்டிச்சாலைக்கு மீன்களை கொண்டு சென்ற காவல்துறை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
அவருடன் தொடர்பில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர்களே தனிமைப்படுத்தலுக்காக அனுப்பபட்டுள்ளனர்.