வவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர்களிற்கு மோட்டார் சைக்கிள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா பிரந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பணியத்தில் பொது சுகாதார பரிசோதகர்களிற்கு 380,000 ரூபா வீதம் 12 மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டது.
பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் மகேந்திரன், பிராந்தி சுகாதார பணிப்பாளர் பணியக வைத்திய அதிகாரி லவன், மற்றும் வைத்திய அதிகாரிகள், வவுனியா வடக்கு சிரேஸ்ட பொது பரிசோதகர் க.மேஜெயா, பொது சுகாதார பரிசோதகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பொது சுகாதார பரிசோதகர்களின் வேலைகளை இலகுவாக்கும் நோக்கத்திற்காகவும் உலக வங்கியின் நிதியுதவுயுடன் இதுவரை அரசினால் வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பெற்றுக்கொள்ளாத பொது சுகாதார பரிசோதகர்களிற்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.