சமூக விரோ செயற்பாடுகளிற்கு இளைஞர்கள், கிராம மட்ட அமைப்புக்கள் இணைந்து நிற்பதை பாராட்டுகின்றோம் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அண்மை நாட்களாக கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தில் 100க்கு மேற்பட்ட இளைஞர்கள் சுயமாக முன்வந்து போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனைக்கு எதிராக களத்தில் குதித்துள்ளமையை பாராட்டும் விதமாக இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , ”உண்மையில் இவ்வாறான சமூகவிரோத செயற்பாடுகளை நாங்கள் கட்டப்படுத்துவதற்கு கிராம மட்ட அமைப்புக்கள் மற்றும் இளைஞர்களின் ஒத்துழைப்புக்கள் கிடைப்பதில்லை.
இவ்வாறான நிலையில் வட்டக்கச்சி பிரதேசம் இவ்வாறான சமூகவிரோத செயற்பாடுகளினால் பாதிப்புறுகின்றோம் என்பதை உணர்ந்து பாதுகாப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் உண்மையில் வரவேற்கதக்க விடயமாக இருக்கின்றது. இது ஒரு முன்னுதாரணமாக செயற்பாடாகவும் பார்க்க முடிகின்றது.
ஆயினும் அவர்களிற்கு தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான விடங்களை கண்காணிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும் அதற்கு பொறுப்பாக உள்ள பொலிஸ் திணைக்களத்திடம் நான் பேச உள்ளேன். இவ்விடயம் தெடா்ரபில் அவர்களுடன் பேசிய பின்னர் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் தொடர்பில் பின்னர் தகவல் வழங்குவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த மக்களின் விழிப்புனர்வு மாற்றத்தை ஏற்படுத்தும் என கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் அவர் ஊடகங்களிற்கு கரு்தது தெரிவிக்கையிலேயே இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை காலமும் போதைப்பொருளை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் மக்கள், அமைப்புக்களின் ஒத்துழைப்பு இல்லாமையால் முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத நிலை காணப்பட்டது, ஆனால் தற்புாது மக்கள் வழிப்படைந்துள்ளனர்.
போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் விழிப்படைந்து இவ்வாறான தடுக்கும் செயற்பாடுகளிற்கு தாமாக ஒன்று திரண்டுள்ளமையானது வரவேற்கதக்க விடயமாகும்.
இவ்வாறான மக்கள் விழிப்பு வேலைத்திட்டங்கள் மூலமாகவே பிரதேசங்களில் போதைப்பொருள் உள்ளிடட சட்டவிரோத செயற்பாடுகளை கட்டப்படுத்த முடியும்.
இது போன்று ஏனைய பிரதேசங்களும் விழிப்படைவதன் ஊடாக சமூக விரோத செயற்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.
வட்டக்கச்சி பிரதேசத்தில் இளைஞர்கள், சமூக மட்ட அமைப்புக்கள் இணைந்து இவ்வாறான சமூக பணியில் ஈடுபட்டுள்ளமையை பாராட்டுவதாகவும்” தெரிவித்துள்ளார்.