சி.வி. விக்னேஸ்வரனின் கருத்து தொடர்பில் அடுத்த பாராளுமன்ற அமர்வில் எதிர்ப்பை வெளியிப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வட மாகாண பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைத் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
“9 ஆவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வில் விக்னேஸ்வரன் ஆற்றிய உரையானது இந்த நாட்டிலுள்ளவர்களுக்கானதல்ல. மாறாக, புலம்பெயர்ந்துள்ளோருக்கு ஆற்றிய உரையாகும். ஆகவே, அது தொடர்பாக குழப்பமடையத் தேவையில்லை.
மேலும், விக்னேஸ்வன் கூறியது போன்று வட, கிழக்கு மக்களுக்கும் தேவையானது இதுவல்ல. ஆகவே, விக்னேஸ்வரனின் கருத்து தொடர்பில் அடுத்த பாராளுமன்ற அமர்வில் எதிர்ப்பை வெளியிப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.